டில்லி
இந்தியாவில் நேற்று 1,79,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,535 பேர் அதிகரித்து மொத்தம் 2,75,47,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,556 அதிகரித்து மொத்தம் 3,18,821 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,64,182 பேர் குணமாகி இதுவரை 2,48,90,326 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 23,27,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 21,273 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,72,180 ஆகி உள்ளது நேற்று 884 பேர் உயிர் இழந்து மொத்தம் 92,225 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 34,370 பேர் குணமடைந்து மொத்தம் 52,76,203 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,01,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 24,214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,23,998 ஆகி உள்ளது இதில் நேற்று 476 பேர் உயிர் இழந்து மொத்தம் 27,405 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,459 பேர் குணமடைந்து மொத்தம் 20,94,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,02,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 24,165 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,48,555 ஆகி உள்ளது. இதில் நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,064 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 30,539 பேர் குணமடைந்து மொத்தம் 21,98,135 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,41,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 33,361 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,78,621 ஆகி உள்ளது இதில் நேற்று 474 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 30,063 பேர் குணமடைந்து மொத்தம் 16,43,284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,178 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,83,862 ஆகி உள்ளது. நேற்று 187 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 19,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,995 பேர் குணமடைந்து மொத்தம் 16,05,696 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.