
ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மலையாளி அல்லாத ஒரு படைப்பாளிக்கு ஓ.என்.வி. விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் பிரபல நடிகை பார்வதி ட்விட்டரில் :
ஓ.என்.வி. சார் நம் பெருமைக்குரியவர். ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவம் அவர் ஆற்றிய பங்கை யாருடனும் ஒப்பிட முடியாது. இப்படிப்பட்ட கௌரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
பார்வதியின் ட்வீட்டுக்கு லைக்குகள் வந்து குவிகிறது. முன்னதாக வைரமுத்துவுக்கு விருது கிடைத்திருக்கும் செய்தியை பார்த்த பாடகி சின்மயி வாவ் என்று ட்வீட் செய்தார்.
[youtube-feed feed=1]— Parvathy Thiruvothu (@parvatweets) May 27, 2021