டெல்லி: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து மத்திய, மாநில அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்கள்,  உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பொதுவாக,  பென்ஷன் வாங்கக் கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழை மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு தொற்று பரவியது முதல்,  ஓய்வூதியதாரர்களின் உடல்நலம் கருதி உயிர்வாழ் சான்றிதழை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த  சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழையும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக  ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.