பிம்ப்ரி சின்ச்வாட்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 5 சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் மகாராஷ்டிர மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தின்சரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று 24 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் இங்குத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் நகராட்சி சார்ப்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் குறைந்து 6000 ஆகி உள்ளது. இவர்களில் 3800 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 2200 பேர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.
இதையொட்டி இந்த நகரில் அமைக்கபிஅட்டுள்ள 5 கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி ஆணையர் விகாஸ் தேஷ்பாண்டே அறிவித்துள்ளார். மூடப்பட்ட இந்த 5 கொரோனா சிகிச்சை மையங்கள் சுமார் 1000 படுக்கைகள்: கொண்டவை ஆகும்.
இந்த மையங்களில் கடந்த சில நாட்களாக புது நோயாளிகள் ஒருவர் கூட வரவில்லை. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க நேர்ந்தால் உடனடியாக இந்த மையங்கள் திறக்கப்படும் என விகாஸ் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ஜூன் 6 ஆம் தேதி மேலும் இரு கொரோனா மருத்துவமனைகள் தொடங்க உள்ளதால் இந்த மையங்களுக்குத் தேவை இருக்காது எனக் கூறப்படுகிறது.