சென்னை: எழும்பூர் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், வாட்ஸ்அப் எண் வெளியிட்டுள்ளார்ல  திமுக எம்எல்ஏ  பரந்தாமன். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுக எம்எல்ஏ பரந்தாமன்.  வழக்கறிஞரான இவர் திமுக கட்சி மாநில சட்ட பிரிவுசெயலாளர்- மற்றும் திமுகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் தனது தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களின் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பரந்ததாமன் எம்எல்ஏ,  எழும்பூர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை என்னிடம் எளிதில் தெரிவிக்க உருவாக்கப்பட்டதே இந்த தானியங்கி Whatsapp சேவை. 99409 40405 என்ற எண்ணில் மக்கள் தங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.