
மூன்று வருடங்களுக்கு முன்னால் அரசியலிலும் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
மக்கள் நீதி மய்ய கட்சியில் நிறைய படித்தவர்கள், நீதிபதிகள், முன்னாள் ஐபிஎஸ் ஐஎப்எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என நன்கு படித்தவர்களை கட்சிகளில் முன்நிறுத்தி கட்சியை வழி நடத்தி வந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன் நிறுத்தப்பட்டு மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத் தேர்தலில் களம் இறங்கியது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் தோல்வி அடைந்தார்.
இதனிடையே கடந்த சில தினங்களாக மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக கட்சியில் இருந்து விலகி கட்சியின் மீதும் கமல்ஹாசன் மீது பல குற்றச்சாட்டுகளை விடுத்தனர்.
இந்த நிலையில் கட்சியின் இந்த நிலையை குறித்து கமல்ஹாசன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியை எப்படி கையாள்வது ,விலகியவர்களை பற்றிய நிலைப்பாடு குறித்து விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
[youtube-feed feed=1]“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” pic.twitter.com/RwAa9ykS71
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2021