சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
கேகேநகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து வந்தது, முன்னாள் மாணவிகள் மூலம் சமூகவலைதளம் மூலம் சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்மீது காவல்துறை 12 Red with 11 I, II, III, IV போக்சோ சட்ட, 354(A), 509, 67, 67(A It act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய்து விசாரணை நடத்தியது. பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜூன் 8 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அப்துல் பரூக் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆசிரியர் ராஜகோபாலுடன் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக அவர் தன்னிடம் பாடம் படிக்கும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்யப்பட்டு உள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், புகார் கூறும் மாணவிகள் குறித்த தகவல்கள் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதாக என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.