சென்னை: கே.கே.நகர் பத்மாசேஷாத்திரி பள்ளி நிர்வாகம் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் பத்மாசேஷாத்ரி பள்ளியின் கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்பது  ஆர்.டி.ஐ. தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த பள்ளிக்கட்டிடங்களை இடித்து தள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுந்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள  பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள்  எழுந்தன.

இதுபோன்ற புகார்கள் பல முறை பள்ளி நிர்வாகத்திடம் கூறியும், சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பபதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகஅரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தது.  அதன்படி, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது – ஆர்டிஐ தகவல்

இந்த நிலையில், தற்போது, சென்னை திநகர் திருமலைப் பிள்ளை சந்தில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியின் மீது புகார் வந்துள்ளது. இந்த பள்ளியானது, விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக திநகர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.கிருஷ்ணன் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, கடந்த ஆண்டு (2020) , தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மாசேஷாத்தி பள்ளி கட்டிடம் -குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு, சிஎம்டிஏ தரப்பில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 7ந்தேதி பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், பள்ளியின் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், சிஎம்டிஏ விதிப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது  பாலியல் புகாரில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் சிக்கியுள்ள நிலையல், விதிகளை மீறி தி.நகரில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை  இடித்து தள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆலமர விழுதுகளாக தமிழகத்தில் படர்ந்துள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் குடும்பத்தினர்…