டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், மே 15ந்தேதிக்கு பிறகு தொற்று பரவல் சற்றே குறையத் தொடங்கியது. படிப்படியாக குறைந்து வந்த பாதிப்பு தற்போது தினசரி பாதிப்பு 2லட்சத்துக்கும் கீழே வந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,96,427 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 2,69,48,874 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,07,231ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,26,850 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,40,54,861 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 25,86,782 பேர் தொற்றுபாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 19,85,38,999 கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
[youtube-feed feed=1]