அறிவோம் தாவரங்களை – திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப்பச்சிலை (Ocimum basilicum)

பாரதம் உன் தாயகம்!
சாலைகளின் ஓரங்களில் தானே வளர்ந்திருக்கும் தேன் செடி நீ!
முற்காலத்தில் திருநீறு தயாரிக்க உன் சாம்பல் பயன்படுத்தபட்டதால் நீ திருநீற்றுப் பச்சிலை ஆனாய்!
ஆசிய நாடுகளில் உணவில் சேர்க்கப்படும் இலை செடி நீ!‘
பேசில்’எனும் பெயரில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உன்னதச் செடி நீ!
துண்ணூற்றுப் பச்சிலை, கரந்தை, உருத்திர சடை, பச்சை சப்ஜா, விபூதி பச்சிலை, பச்ச பத்திரி, திருநீற்றுப் பத்திரி எனப் பல்வகைப் பெயரில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
வயிற்று நோய்கள், நீர்க்கடுப்பு, உடல் சூடு, காய்ச்சல், வாந்தி, சிறுநீர்ப் பெருக்கம், முகப்பரு, கட்டிகள், தலைவலி, வயிற்று வாயு, காது நோய்கள், இருமல், அஜீரணம், நெஞ்சுவலி, கப நோய்கள், தலைவலி, வாய்ப் புண், வெட்டை நோய்கள், கொழுப்புக்கட்டிகள், ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
குளியலுக்குப் பயன்படும் மூலிகை இலை செடி நீ!
தேநீர் தயாரிக்க பயன்படும் கார்ப்புச் சுவை கொண்ட இலை செடியே!
கோயில்களில் வளர்க்கப்படும் தெய்வீகச் செடியே!
அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புதச் செடியே!
சர்பத், பலூடா தயாரிக்கப் பயன்படும் நறுமணம் மிகுந்த நல்ல இலை செடி நீ!
வெண்மைக் கலந்த ஊதாப் பூப் பூக்கும் உன்னதச் செடியே!
வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகைச் செடியே!
மூலிகைகளின் அரசனே!
தூக்கத்தைக் கொடுக்கும் சுகமான இலை செடியே!
நீவிர் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.
[youtube-feed feed=1]