சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் தோல்வி அடைந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய்விடாது, உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டு மாபெரும் தோல்வி அடைந்தது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்துகொண்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து , தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கமல்ஹாசன் மீது நேரடியாக குற்றம் சாட்டினால். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.இதையடுத்து , மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்று குற்றம் சாட்டினர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் முதலில் விலகினார். அதைதொடர்ந்து, பேரும்பாலான நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகிச் சென்றனர்.“
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், நம் மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துபோய்விடாது என்றும், என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.