சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டில் தெரிவித்து உள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி‘. (Padma Seshadri Bala Bhavan Senior Secondary School). இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார், ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதி ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) யார் தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவியும், பிரபல கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வருகிறார்.
மிகவும் பிரபலமான இந்த பள்ளிமீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் வந்துள்ளதாக திமுக எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,
பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிக ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களிடமிருந்து வரும் புகார்களுக்கு எதிராக செயல்படத் தவறிய பள்ளி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்
சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]