சென்னை:
வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் மே 24-ஆம் தேதி அதிகாலை முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரகால தளர்வுகள் அற்ற ஊரடங்கின்போது பால், குடிநீர், செய்தித்தாள் விநியோகம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களும் அனுமதிக்கப்படும் என்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
[youtube-feed feed=1]