கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் பிரபாஸ். Homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
தெலங்கானாவில் உள்ள கோதவரிகணி நிலக்கரி சுரங்கங்களில் இதன் ஷூட்டிங் சுமார் 40 போலீசார் பாதுகாப்புடன் நடந்தது ,
இந்நிலையில் நடிகை ஜோதிகா சலார் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தில் அவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
“வரும் 2022 ஏப்ரல் 14-ஆம் தேதி சலார் திரைப்படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது என் அப்படக்குழு அறிவித்துள்ளது .