கோவை:
கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்ஜை தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை என்னும் தொற்று பரவி வருகிறது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொற்றாக உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் 6 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த ஆறு பேரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.