சென்னை: ஆவின் பால் விலையை குறைக்காமல் விற்பனை செய்த 11 விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் பதவி ஏற்றதும் முதலில் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் ஆவின் பால் விலை குறைப்பும் ஒன்று. அதன்படி, பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு, மே 15ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், சில ஆவின் முகவர்கள் பழைய விலைக்கே ஆவின் பால் விற்பனை செய்து வருவதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், அதிக விலைக்கு பால் விற்பனை செய்த முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், Aavin Milk விலையை குறைக்காமல் விற்பனை செய்த 11 விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.