மீரட்
இந்தியாவின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிர் இழந்தார்.

இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவரான புவனேஸ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் உத்தரப்பிரதேச காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். துபாயில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக புவனேஸ்வர் குமார் விளையாடிக் கொண்டிருந்தார்
அப்போது அவருடைய தந்தை கிரண் பால் சிங்கிற்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. புவனேஸ்வர் குமார் துபாயிலிருந்து அவசர அவசரமாக நாடு திரும்பினார். அதையொட்டி கிரண் பால் சிங், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் இங்கிலாந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்டன.
இந்த சிகிச்சைகளுக்குப் பின் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். மீண்டும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது, அவர் மீரட்டின் கங்கா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நேற்றிரவு அவர் திடீரென காலமானார்.
கிரண் பால் சிங் வயது 63 ஆகும். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள வீட்டிலேயே உயிர் இழந்தார். மரணமடைந்த கிரண் பால் சிங்கிற்கு இந்திரேஷ் தேவி என்ற மனைவியும், புவனேஸ்வர் மற்றும் ரேகா என்ற மகளும் உள்ளனர். தந்தையின் மறைவுக்காக புவனேஸ்வர் குமாருக்கு விளையாட்டுத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.