சென்னை:
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நோய்த்தொற்றுக்கான சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]