
வடிவேலுவின் ’கிணத்தை காணோம்’ என்ற காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து, வடிவேலு சொல்லும் காரணங்களால் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என உதறிவிட்டு செல்லும் நெல்லை சிவா நேற்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.
சமீபமாக எஸ்.பி.ஜனநாதன், விவேக், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மரணமடைந்த நிலையில் தற்போது நெல்லை சிவா மரணம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தியின் மாமாவாக நடித்து வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Patrikai.com official YouTube Channel