மும்பை:
இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த விபத்தில் பெரியளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று அதிகாலை நேரத்தில், கப்பலின் ஒரு பகுதியில் தீ பிடித்ததை அங்கு தங்கியிருந்த வீரர்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து பணியில் இருந்த அவர்கள் தீயை அணைக்க போராட்டினார். இந்த தீ விபத்தின் போது கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக இருப்பதுடன், தீ விபத்தில் பெரியளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.