சென்னை:
மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இவர்களில் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஸ்குமார், ராஜ்குமார், முனிரெத்னம், செல்வ பெருந்தகை ஆகியோர் ஒருமுறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதம் உள்ள 12 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபெற்று இருப்பவர்கள்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு சத்திய மூர்த்திபவனில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு டெல்லி மேலிட பார்வையாளர் வந்து எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.