சென்னை:
ன்றைய ஆலோசனை கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார விவாதம் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. அதிமுக கூட்டணிக் கட்சிகள் 10 இடங்களைப் பெற்றன. பாஜகவுடன் கூட்டணி, 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அவசரப்பட்டு முடிவெடுத்தது, மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்காமல் இருந்தது, உட்கட்சிப் பூசல், கரோனா பரவலை சரியாகக் கையாலாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கு முன்னரே அமமுகவையும், சசிகலாவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதை ஏற்கவில்லை. இதனால் 20 இடங்களில் அதிமுகவின் வாக்குகளை அமமுகவினர் பிரித்தனர். போட்டி வேட்பாளர் சேந்தமங்கலம் வாக்குகளைப் பிரித்ததால் அந்தத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி பறிபோனது.

இதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று கருதப்பட்ட சிஏஏ சட்டத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு சிறுபான்மை மக்கள் வாக்குகளை இழக்கக் காரணமாக அமைந்தது. சென்னை மண்டலம், மத்திய மண்டலம், திருவண்ணாமலை, டெல்டா உள்ளிட்ட பல மண்டலங்களில் அதிமுக பலத்த தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவில் பல அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல் தொகுதியிலேயே முடங்கினர்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டாலினுக்கு இணையாகப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றது. 10 அமைச்சர்கள் தோற்றுப்போயினர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய ன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் என்று மு தெரிவித்துள்ளார்.