சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின்,. பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், முதன்முதலாக தான் பிறந்து வாழ்ந்த இடமானதும், மறைந்த கருணாநிதியின் இல்லமுமான, சென்னை- கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட ஸ்டாலி, வீட்டினுள் உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது கண்ணீர் விட்டு அழுதார். அதைத்தொடர்ந்து தாயார் தயாளுஅம்மாவிடமும் ஆசி பெற்றார்.
Patrikai.com official YouTube Channel