உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள தவார் கிராமத்தில் நடக்க இருந்த திருமணம் மாப்பிள்ளைக்கு கணக்கு தெரியாததால் நின்று போனது.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் நடக்க இருந்தது.
இதற்காக மாப்பிள்ளை தனது உறவு பரிவாரகங்களுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு வந்தார்.
தாலி கட்ட இருந்த நேரத்தில் மணப்பெண், மாப்பிள்ளையிடம், இரண்டாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்குமாறு கேட்டிருக்கிறார்.
வாய்ப்பாடு தெரியாமல் மாப்பிள்ளை முழித்ததை அடுத்து, இந்த திருமணம் வேண்டாம் என்றும் சாதாரண கணக்கு கூட போட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று மணவறையை விட்டு வெளியேறினார்.
மாப்பிள்ளையின் படிப்பு குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை, தற்போது தான் அவர் பள்ளிக்குகூட சென்றிருக்க மாட்டார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது, மணமகள் எடுத்த முடிவு சம்பிரதாயத்தை மீறியதாக இருந்தாலும் சரியான முடிவுதான் என்று மணமகளின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்,
ஊர் பெரியவர்கள் கூடி, இருவீட்டார் வழங்கிய சீதன பொருட்கள் உள்ளிட்ட கணக்கை சரிபார்த்து இந்த திருமணம் நின்று போனதாக அறிவித்ததை அடுத்து வழக்கு காவல் நிலையத்துக்கு வராமல், ஊர் பஞ்சாயத்தோடு முடிந்தது என்று அந்த சரக காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.