
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டுள்ளது. எங்கும் பாதிப்புகள், மரணங்கள். திரைநட்சத்திரங்கள் கணிசமானவர்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நடிகர் அதர்வாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.
தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “கோவிட் பரிசோதனையில் எனக்கு நெகட்டிவ் வந்துள்ளது. உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். கவனமாக இருங்கள், வீட்டில் இருங்கள்” என்று அதர்வா கூறியுள்ளார்.
— Atharvaa (@Atharvaamurali) May 4, 2021
Patrikai.com official YouTube Channel