கொல்கத்தா

ன்று காலை திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.  இதையொட்டி அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார்.   இன்று காலை அவர் மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார்.

இந்த பதவி ஏற்பு விழா கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற உள்ளது.  எனவே பிற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

விழாவில் கலந்து கொள்ள மேற்கு வந்த மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாசார்யா, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் தலைவர் பீமன் போஸ், திருணாமுல் எம் பி அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், சவுரவ் கங்கூலி அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.45 மணிக்குப் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.   இன்று மம்தா பானர்ஜி மட்டுமே பதவி ஏற்க உள்ளார்.   பதவி ஏற்புக்குப் பின் மம்தா மேற்கு வங்க மாநிலத் தலைமை செயலகத்துக்குச் செல்கிறார்.  அங்கு அவருக்கு கொல்கத்தா காவல்துறை அளிக்க உள்ள மரியாதை அணிவகுப்பை மம்தா ஏற்க உள்ளார்.