சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாஜக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களியே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 26ந்தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிக அளவிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்து வந்தது. ஏப்ரல் 6ந்தேதி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த தேர்தல்களில் அஸ்ஸாம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக பெரும்தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடந்த 18 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று மீண்டும் விலைகளை உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.