தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கொரோனா குறித்து ஆலோசனை வழங்குவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.இதற்கு திமுகவினரும், நெட்டின்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. . இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமர்கிறது.
இந்த தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் கடும் இழுபறிக்கு பின்பு வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் “மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, கொரோனா தடுப்புப் பணிகளில் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஈடுபடுவேன். இது மிகவும் சவாலான நேரம். இந்த சூழலில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான் முதன்மையான பணி. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவேன் என கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சரின் இந்த தகவல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. திமுகவில் இவரை விரை சூப்பரான அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள். அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள், இவரது ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்றும்,
சுகர் இருக்கு BP இருக்கு எதுக்கு இன்னும் கஷ்டப்படுறீங்க. நாங்க பார்த்துக்குறோம். நீங்க புடுங்குன ஆணி எல்லாமே தேவை இல்லாதது உள்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.