சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ்நபாடு தலைமைச்செயலச் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணி சாமி, செயலாளர் சி.ஆறுமுகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், தமிழகஅரசின் துணைமுதல்வர் என பல பொறுப்புகள் வகித்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு தலைமைச்செயலகம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளனர்.

Patrikai.com official YouTube Channel