சென்னை:
ட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் சிவி சண்முகம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 27 அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்றது.

திமுக 159 இடங்களையும், அதிமுக 75 இடங்களையும் கைப்பற்றி உள்ள நிலையில் அமைச்சர்கள் 11 பேர் தோல்வியும், 16 பேர் வெற்றியும் அடைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற அதிமுக அமைச்சர்கள்

1. எடப்பாடி பழனிசாமி – எடப்பாடி தொகுதி

2. ஓ.பன்னீர்செல்வம் – போடி நாயக்கனுார் தொகுதி

3. சீனிவாசன் – திண்டுக்கல் தொகுதி

4. செங்கோட்டையன் – கோபிசெட்டிபாளையம் தொகுதி

5. செல்லுார் ராஜு – மதுரை மேற்குதொகுதி

6. தங்கமணி – குமாரபாளையம் தொகுதி

7. வேலுமணி – தொண்டாமுத்துார் தொகுதி

8. அன்பழகன் – பாலக்கோடு தொகுதி

9. கருப்பணன் – பவானி தொகுதி

10. காமராஜ் – நன்னிலம் தொகுதி

11. ஓ.எஸ்.மணியன் – வேதாரண்யம் தொகுதி

12. உடுமலை ராதாகிருஷ்ணன் – உடுமலைப்பேட்டை தொகுதி

13. சி.விஜயபாஸ்கர் – விராலிமலை தொகுதி

14. கடம்பூர் ராஜு – கோவில்பட்டி தொகுதி

15. ஆர்.பி.உதயகுமார் – திருமங்கலம்தொகுதி

16. சேவூர் ராமச்சந்திரன் – ஆரணி தொகுதி

தோல்வி அடைந்த அமைச்சர்கள்

1. சி.வி.சண்முகம் – விழுப்புரம் தொகுதி

2. கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை தொகுதி

3. ஜெயகுமார் – ராயபுரம் தொகுதி

4. எம்.சி.சம்பத் – கடலுார் தொகுதி

5. நடராஜன் திருச்சி – கிழக்கு தொகுதி

6. ராஜேந்திர பாலாஜி – ராஜபாளையம் தொகுதி

7. பெஞ்சமின் – மதுரவாயல் தொகுதி

8. பாண்டியராஜன் – ஆவடி தொகுதி

9. ராஜலட்சுமி – சங்கரன்கோவில் தொகுதி

10. சரோஜா – ராசிபுரம் தொகுதி

11. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – கரூர் தொகுதி