பெரிய நம்பிக்கையுடன், அமமுக கூட்டணியோடு, தான் களம் கண்ட விருதாச்சலம் தொகுதியில் டெபாசிட் பறிகொடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
கடந்த 2006ம் ஆண்டு, விஜயகாந்த், தனி ஆளாக களமிறங்கி, பாமக மற்றும் அதிமுகவை இத்தொகுதியில் வீழ்த்தி, சுமார் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2011 தொடங்கிய காலம் முதல், பல்வேறு தவறான அரசியல் முடிவுகளால், தேமுதிக, கிட்டத்தட்ட தனது முடிவை நோக்கி சென்றுவிட்டது. இந்நிலையில், இந்த 2021 தேர்தலில், அதிமுக கூட்டணியிலிருந்து அவமானகரமாக வெளியேறிய நிலையில், விருதாச்சலம் தொகுதியில், ஒரு பெரிய நம்பிக்கையோடு களமிறங்கினார் பிரேமலதா.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பின்தங்கிய பிரேமலதா, வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் டெபாசிட் தொகையையே பறிகொடுத்துள்ளார்.