சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கேகேநகர் பத்மசேஷாத்திரி பள்ளி ராஜகோபாலன் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் புகார் கூறினர். இதையடுத்து, அவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியதுடன், ஜூன் 3ம் தேதி மீண்டும் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட உள்ள விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்னும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.