டெல்லி: மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான மறைந்த ராம்ஜெத்மலானியின் மகன்,  மகேஷ் ஜெத்மலானி ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் 80 வது பிரிவின் கீழ் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றதற்காக மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மறைந்த  ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி. இவர் டெல்லியில் உள்ள  செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். கடந்த 2004ம் ஆண்டு ஜெத்மலானி ‘மூத்த வழக்கறிஞராக’ நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்திலும் நாட்டின் பல உயர் நீதிமன்றங்களிலும் பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

குறிப்பாக பிரியம்வாடா பிர்லா வழக்கு, மாருதி உத்யோக் வழக்கு, அதில் அவர் பிர்லாவை பிரதிநிதித்துவப்படுத்தினார், அதுபோல பிரபல பங்குசந்தை புரோக்கர்  ஹர்ஷத் மேத்தா வழக்கிலும் ஆஜராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.