வரும்  சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, “வாக்கு “பதிவு”  என்ற புதிய பகுதி இன்று முதல் வெளியாகிறது.  தேர்தல் குறித்த தங்கள் பார்வையை அரசியல் விமர்சகர்கள்  இந்த பகுதியில் நம்முடன்பகிர்ந்துகொள்வார்கள்.
 
Evening-Tamil-News-Paper_56670343876

திமுகவா அதிமுகவா மக்கள் நல கூட்டணியா?: பாரதி சுப்பராயன்

 
ணைய அரங்கிலும் மக்கள் மத்தியிலும் இந்த விவாதம் தான் தூள் பறந்து கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை இந்த கேள்வியே தவறு. ஏன் என்பதை இந்த பதிவின் கடைசியில் புரிந்து கொள்வீர்கள்.
திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்று சொல்வதில் அந்த கட்சிகளின் பெரும்பாலான தொண்டர்களுக்கே தயக்கமிருக்காது என்றே நினைக்கிறேன்.
அங்கே 2ஜி என்றால் இங்கே சொத்து குவிப்பு.
அங்கே குடும்ப அரசியல் என்றால் இகே அடிமைகளின் சகிக்க முடியாத ஆராதனை.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இரு கட்சிகளிலும் இணை கற்பிக்க நாம் சிரமப்படவே தேவையில்லை என்னும் அளவிற்கே அவர்களது செயல்பாடு இருக்கிறது.
அறிவு ஜீவிகள் என்று கூறப்படுபவர்கள், ஒவ்வொரு தேர்தலின் முன்பும் அன்றைய ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பதற்கு பாயின்ட் பாயின்டாக விளக்கங்கள் வைப்பார்கள். போன முறை, அழகிரியின் அராஜகங்கள், 2ஜி ஊழல், ஈழ பிரச்சினையில் கலைஞரின் நிலை என்று காரணங்களை அடுக்கி திமுக ஆட்சிக்கு வரவே கூடாது அதனால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றனர்.

பாரதி சுப்பராயன்
பாரதி சுப்பராயன்

இந்த முறை, அடிமைகளின் அராஜகங்கள், ஸ்டிக்கர் ஓட்டும் கூமுட்டைகள், வெள்ள பிரச்சனையில் அரசின் திறமையின்மை, சொத்துகுவிப்பு வழக்கு என்று பிரச்சினைகளை அடுக்கி, ஆதிமுக வரவே கூடாது என்று திமுகாவிற்கு வாக்களியுங்கள் என்று கூவுகிறார்கள். அவர்களைபோருத்த வரையில் மக்கள்நல கூட்டணி அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் என்று நம்புவதால் அதை கடுமையாக சாடுகிறார்கள். (உண்மையில் திமுகவின் குடும்ப அரசியல் பிடிக்காமல் அதிமுகவிற்கு வாக்களிக்கும் வாக்காளர்களும் மக்கள் நல கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்பதால் இரு கட்சிகளின் வாக்குகளையும் சம அளவில் பிரிக்கும் என்பதே எனது நம்பிக்கை.)
ஆனால் இப்படி மாற்றி மாற்றி மக்களை வாக்களிக்க சொல்வதில் என்ன அறிவுஜீவித்தனம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இப்படி மாற்றி மாற்றி வாக்களித்ததனால் தான் எவ்வளவு ஊழல் செய்தாலும் ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற துணிச்சலை அக்கட்சிகள் பெற்றிருக்கிறது. இதுவே அவர்களை கவலை இல்லாமல் ஊழல் செய்ய தூண்டுகிறது.
மக்கள் நல கூட்டணியினர் ஜெயிக்கிறார்களோ, தொற்கிறார்களோ, நிலைக்கிறார்களோ உடைகிறார்களோ, இரு கட்சிகளுக்கு மாற்றாக, கொள்கை ரீதியான ஊழலற்ற ஒரு கூட்டணியை மக்கள் முன் துணிந்து வைத்ததற்காக அவர்களை பாராட்டியே தீர வேண்டும். மக்கள் நல கூட்டணிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும், எவ்வளவு ஊழல் செய்தாலும் ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஆட்சிகழகு வந்துவிடலாம் என்ற அவர்களது நம்பிக்கையில் விழும் மரண அடி என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்த அடி மட்டும் தான் நம் எதிர்கால அரசியலை ஆரோக்கியமான பாதைக்கு இட்டு செல்லும் என்று நம்புகிறேன்.
அப்படியானால், மக்கள்நல கூட்டணியினருக்கு வாக்களிக்க சொல்பவர்களின் பட்டியலின் சமீபத்திய இணைப்பு தான் நானா என்றால், இல்லை என்பதே எனது பதில்.
கொள்கை ரீதியான கட்சிகள் என்பதற்கு முன் தகுதியான வேட்பாளர் தேர்வு என்பதே இன்றைய காலத்தின் அவசியம் என்பதை முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.
நாடே மோடி மோடி என்று குதித்துக் கொண்டிருந்த போதும் அதையே சொன்னேன். இப்பொழுது, அதையே சொல்கிறேன்.
கட்சிக்காகவோ, கூட்டனிக்காகவோ ஓட்டு என்ற நிலை மலை ஏற வேண்டும். ரவுடிகளும் அயோக்கியர்களும் முட்டாள்களும் பாராளுமன்றதிற்கும் சட்டமன்றத்திற்கும் போகும் சூழலை ஏற்ப்படுதியதே இந்த கட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் செலுத்தப்பட்ட ஓட்டு தான். இவர்களிலிருந்து உருவாகும் தலைவர்கள் மட்டும் மகாத்மாக்கலாகவா இருப்பார்கள். அவர்களும் அயோக்கியர்கலாகத் தான் இருப்பார்கள். அதனால் தான் இன்று நம் முன் இருக்கும் இரு கட்சிகளும் ஊழலில் திளைத்திருக்கிறது.
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பார்பதற்கு முன் இந்த அயோக்கியர்களையும் அடிமைளையும் மக்கள் மன்றங்களை விட்டு துரத்த வேண்டும். அதனால், வாக்களிக்கும் முன், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அந்த வேட்பாளர் சமூக சிந்தனை உள்ளவரா, நேர்மையானவரா, அரசியல் அறிவுள்ளவரா என்று தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அப்படி முன்பே செய்திருந்தால், நாம் காமராஜர்களையும், ஜீவாக்களையும், நல்லகன்னுக்களையும், ஓமந்தூரார்களையும் இழந்திருக்க மாட்டோம். நம் நாட்டின் அரசியல் இவ்வளவு கீழ்த்தரமாக இருந்திருக்காது.
அதனால், இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு என் வாக்கு என்பதை விட எந்த வேட்பாளருக்கு என் வாக்கு என்பதே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலை.