மோடி அரசின் செயல்பாடுகளை அடிக்கடி கண்டித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

சித்தார்த்தின் சமீபத்திய தாக்குதலுக்கு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளாகியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இந்தியா முழுவதும் அவதிப்படுகின்றனர். பல மரணங்கள் நிழந்துள்ளன.

உண்மை இவ்வாறிருக்க, உபியில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை, அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார் யோகி ஆதித்யநாத். ஆமாம், உபியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கு. இதை நான் சொல்கிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு என் சொத்துக்களை பறிமுதல் செய்து பாருங்கள் என்று பதிலடி தந்தார் ப்ரியங்கா காந்தி.

இதற்கு பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் சித்தார்.

சித்தார்த் பதிவிட்ட காட்டமான கருத்து பல தரப்பிலும் வைரலானதுடன் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பின.

இந்நிலையில் தமது போன் நம்பரை பிரபல கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமது குடும்பத்தினருக்கும் தனக்கும் பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும், அவர்களின் ஐடிக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஆனாலும் தான் தன் வாயை மூடப் போவதில்லை, முயற்சி பண்ணி பாருங்கள் என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு #StandwithSidharth எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

https://twitter.com/Actor_Siddharth/status/1387653507814072325