
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் தவிர்த்து கர்நாடாகாவில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரைப் பார்த்தாலும் முழு ஊரடங்கு வரப்போகிறது. இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க…அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது. கேள்வி என்னனா முழு லாக்டவுன் வருமா வராதா? குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]யார பாத்தாலும் Full lockdown வரப்போது இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க…அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது….கேள்வி என்னனா Full Lock down வருமா வராதா??
குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ்…
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾— Bala saravanan actor (@Bala_actor) April 27, 2021