சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ஹைதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கில் 3 வாரங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்தின் வில்லன் ஜகபதி பாபு தனது அறையில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், “ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்காக ஒரு பயங்கரமான கெட்டப்பில் வர முயற்சிக்கிறேன். இறுதியாக, அரவிந்தாசமீதாவின் பாசி ரெட்டி கெட்டப்பை தோற்கடிப்பேன்.” என்றும் ஜகபதி பாபு குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CODhRx1HP2I/