கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும், மருத்துவமனையில் பெட் வேண்டும், மருந்து வேண்டும், பிளாஸ்மா வேண்டும், தயவு செய்து யாராவது உதவுங்கள் என பலர் கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

முதல் அலையை விட இரண்டாவது அலை மோசமாக இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவின் வேகம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

[youtube-feed feed=1]