சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம் திறக்க அனுமதி வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு கூறியதை அடுத்து தமிழக அரசு முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஆனால், உச்சநீதிமன்றம் அவசர தேவைக்கு ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கருத்து கூறியது. இதுகுறித்துதமிழகஅரசு பிரம்மானப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆலையை ஆக்சிஜனுக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என கூறியன.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல ஏனென்றால் இந்த ஆலையை மூடியது தமிழக அரசு தான். இன்றைய சூழலில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதற்காக ஆலையை திறக்கலாமா என்பது குறித்து கேட்கப்பட்டு வருகிறது என்றார். பெரும்பாலான கட்சிகள் ஆலையை திறக்க பச்சைக்கொடி காட்டியதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கவும் மின்சாரத்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஒரு சில தீர்மானங்கள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இயற்றபட்டு உள்ளதாகவும் அந்த தீர்மானங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.