குவாட்டமாலா: மத்திய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக வில்வித்தை தொடரில், ரிகர்வ் பிரிவில் இந்தியப் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது.

இறுதிப்போட்டியில், மெக்சிகோவை எதிர்கொண்டு வென்றது இந்திய அணி. நமது அணியில் தீபிகா குமாரி, அன்கிதா பகத் மற்றும் கோமலிகா பாரி ஆகியோர் களமிறங்கினர்.

இரு அணிகளும், தலா 4 செட்களை கைப்பற்றவே, போட்டி சமனில் இருந்தது. பின்னர், வெற்றியாளரை முடிவுசெய்யும் ஷூட்ஆப் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி, 5-4 என்ற கணக்கில் வென்று, தங்கத்தை தட்டிச் சென்றது.

உலகக்கோப்பையில், இந்த ரிகர்வ் பிரிவில், இதற்குமுனனதாக, மொத்தம் 5 முறை, இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. கடைசியாக 2014ம் ஆண்டு இந்தியப் பெண்கள் அணி, தங்கம் வென்றிருந்தது.