ஹேம்பர்க்: ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான ஜெர்மனி கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டி, ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி.
ஆஷ்லே பார்டி, தற்போது உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ளார். இறுதிப் போட்டியில், இவர், உலகின் ஏழாவது இடத்திலுள்ள பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்காவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், முதல் செட்டை அரினா கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை 6-0 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-3 என்ற கணக்கிலும் வென்று, கோப்பையைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டி, மொத்தமாக 1 மணிநேரம் 47 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சீசனில், இவர் வென்ற மூன்றாவது பட்டமாகும் இது.