டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி திண்டாடி வரும் நிலையில், அதற்கு காரணம் மாநில கெஜ்ரிவால் அரசு என்று குற்றம் சாட்டியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், டெல்லி அரசு விளம்பரத்திற்காக 822 கோடி செலவிட்டுள்ளது, ஆனால், மக்களின் தேவைக்கான கெஜ்ரிவால் ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
கொரோனா 2வது அலை உச்சம்பெற்றுள்ள மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காத நிலையில், உயிரிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளிகளின் உயர்காக்க அளிக்கப்படும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை, பொதுஇடங்களில் தீயிட்டு எரிக்கும் அவலம் நடந்தேறி வருகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் (Ajay Maken), கெஜ்ரிவால் அரசை கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், கெஜ்ரிவால் அரசு தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநிலவ அரசு விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்துள்ளது. ஆனால், தலைநகரில் ஆக்ஸிஜன் சேமிப்பு திறனை அதிகரிக்கவும், புதிய ஆலைகளை அமைக்கவும் கடந்த ஒரு வருடத்தில் எதுவுமே செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளார்.,
மேலும், டெல்லியில் 8ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க , பிஎம் கேர்ஸ் (PM CARES) நிதியிலிருந்து மத்தியஅரசு பணம் ஒதுக்கிய நிலையில், ஒரே ஒரு ஆலையை மட்டுமே கெஜ்ரிவால் அரிசு அமைத்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் சேமிப்பு திறனையும் அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஆனால்ர, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் கடந்த ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்ட 37 ஆலைகளில் 7 பெரிய ஆக்ஸிஜன் சேமிப்பு ஆலைகள் உள்பட 24 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைத்துள்ள என்றும், ஆனால், டெல்லி அதற்கான முயற்சியை எடுக்க தவறி விட்டது.
கடந்த ஆண்டு மட்டும் கெஜ்ரிவால் அரசு, விளம்பரத்திற்காக ரூ. 355 கோடி செலவிட்டு உள்ளது. அதுபோல, இந்த ஆண்டுக்கான விளம்பர பட்ஜெட்டாகரூ. 467 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ., 822 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையில், 800 ஆக்சிஜன் ஆலைகளை அமைத்திருக்க முடியும், 750 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்ஸிஜனை சேமிக்கும் திறனை ஏற்படுத்தியிருக்கலம். ஆனால் கெஜ்ரிவால் அரசு ஒன்றும் செய்யவில்லை.
இவ்வாறு அஜய் மக்கான் குற்றம் சாட்டினார்.