கண்டி: இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அனைவரும் அறிந்தபடி, டிராவில் முடிந்தது.
வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில், 541 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில், 2 பேர் சதமும், 3 பேர் அரைசதமும் அடித்தனர்.
பதிலுக்கு ஆடிய இலங்கை அணியில், துவக்க வீரர் கருணரத்னே 244 ரன்கள் அடித்து அவுட்டானார். டி சில்வா 166 ரன்களை சேர்த்தார். ஒருவர் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சிறிது ரன்களை அடிக்க, அந்த அணி, 8 விக்கெட்டுகளுக்கு 648 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. வங்கதேசத்தைவிட 107 ரன்கள் கூடுதலாகப் பெற்றது.
ஐந்தாவது நாளில், இலங்கை டிக்ளேர் செய்ய, கடைசிநாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேசம், 100 ரன்களுக்கு, 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டி நடைபெற்ற கண்டி மைதானம், பந்துவீச்சாளர்களுக்கு சோதனையான மைதானமாகவே அமைந்துபோனது.