குவாட்டமாலா சிட்டி: மத்திய அமெரிக்காவின் குவாட்டமாலா சிட்டியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை வில்வித்தை தொடரில், இந்தியப் பெண்கள் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி சார்பாக, தீபிகா குமாரி, அன்கிதா மற்றும் கோமலிகா கூட்டணி களமிறங்கியது.
இந்திய அணி, காலிறுதிப் போட்டியில் குவாட்டமாலா அணியையும், அரையிறுதியில் ஸ்பெயினையும் வீழ்த்தியது. இந்த இரண்டு போட்டிகளையுமே, இந்திய அணி 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
இதனையடுத்து, இறுதிப்போட்டியில், இந்தியப் பெண்கள் அணி, மெக்சிகோ பெண்கள் அணியை சந்திக்கிறது. இதிலும் வென்று, இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.