சென்னை: தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட 2000 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தற்காலிகமாக மூட தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, ஏழைகள் பயன்பெறும் வகையில்கடந்த டிசம்பர் மாதம்  தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொடங்கிவைத்தார்.  இந்த மருத்துவமனையில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணிக்கு அமர்த்தப்பட்டு கிசிச்சை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், எழுந்துள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறையை போக்கும் வகையில்,  அவர்களை, அரசு மருத்துவமனையில் பணியாற்றச் செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்கு செல்வதால் மினி கிளினிக்குள் மூடப்பட்டுள்ளது.மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.