சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும், வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியாக சற்று தாமதம் ஆகும் என்றும் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதியே முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே2ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடைடயில் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், இரவு நேர லாக்டவுன் மற்றும் க ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முழுமுடக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதனால், வாக்கு எண்ணும் தினமான மே 2ஆம் தேதியும் ஞாயிறு என்பதால் முழு முடக்க உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அன்றைய தினம் லாக்டவுன் கிடையாது என்று தெரிவித்துள்ள சாகு, வாக்கு எண்ணிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், மே 2ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணி தொடங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வழக்கமாக 8 மணிக்கே தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இந்த முறை தபால் வாக்குகள் பெற மே2ந்தேதி காலை 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணும் நேரம் அரை மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு தான் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து , வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ண தொடங்கப்படும்.
வாக்கு பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதுவரை எந்த தவறும் நிகழவில்லை என தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருபோதும் ஹேக் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.