போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர் உயிழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,74,944 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் மொத்தம் எண்ணிக்கை 1,50,57,767 ஆக உயர்ந்துள்ளது. அதுபோலஉயிரிழப்பும் 1,78,793 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது 19,23,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தீவிர தொற்று பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பல மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதையடுத்து ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க, அதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பதுடன், அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய பிரதேச மாநிலம், ஷாடோல் நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா பராமரிப்பு தீவிர சிகிச்சை வார்டில் 62 நோயாளிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் ஆக்சிஜன்பற்றாக்குறையால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதை அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் மிலிந்த் சிரால்கர் உறுதி செய்துள்ளார். இது பரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறிய ஷாடோல் நகர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மிலிந்த் சிரால்கர், 6 நோயாளிகள் திரவ ஆக்சிஜனின் குறைந்த அழுத்தம் காரணமாக இறந்தனர். இது தொடர்பாக நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், விசாரணை நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரலணமாக நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதாகவும் கூழுறப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலியாகி இருப்பதற்கு முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலியாகி இருக்கும் வேதனையான தகவல் ஷாடோலில் இருந்து வந்துள்ளது. போபால், இந்தூர், உஜ்ஜைனி, சாகர், ஜபல்பர், காண்ட்வா, கார்சோன் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்ந்தும்கூட அரசு ஏன் விழித்துக்கொள்ளவில்லை? நிலைமை அச்சம் தருவதாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் ஊசிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மருந்தும் சரி, ஆக்சிஜனும் சரி இருப்பு உள்ளதாக காகிதத்தில்தான் உள்ளது. உண்மையில் இல்லை” என கூறி உள்ளார்.
சமீபத்தில், மத்தியில் மராட்டிய மாநிலம், நாலசோப்ராவில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கோரோனா நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.