டெல்லி:  கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும்  விலை குறைப்பு அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து ரூ.899 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதில் பெரும்பங்கு வகித்து வருகிறது ரெம்டெசிவிர் ஊசி மருந்து. தற்போதுநாடு முழுவதும் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம், விலையையும் உயர்த்தியது. அதன்படி குறைந்த பட்ச விலை 2,800 முதல் 5,400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் அதிக அளவு ஏற்றுமதி செய்து வந்தது. இதனால், இந்தியாவில் தட்டுப்பாடு நிலவியது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டை போக்க, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும என்றும், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசை வலியுறுத்தி வந்தன.

இதைதொடர்ந்து,   ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர்  மருந்து தயாரிப்பு வரும் 7  நிறுவனங்கள் பெருமளவு குறைத்துள்ளன. அதன்படி, விலையும் கணிசமாக மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு குறைத்துள்ளன.  பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான  காடிலா ஹெல்த்கேர் நிறுவனம் 2800 ரூபாயிலிருந்து, 899 ரூபாயாக குறைத்துள்ளது. இதை,  மத்திய ரசாயனத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.