ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை தாண்டி உள்ளது. அதுபோல உயிரிழப்பும் 30லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். தற்போது, 2வது அலை, 3வது அலை என உருமாறிய நிலையில் மீண்டும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகள் மக்களுக்கு செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மற்றொருபுறம் அதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது.
உலகம் முழுவதும இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர்கள் மொத்த எண்ணிக்கை 14,05,11,425 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 30,12,007 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் நோய் பாதிப்பில் இருந்து 11,93,30,709 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரம் பலியாகியுள்ளனர்.