டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதை  தொடர்ந்து பிரதமர் மோடி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவதுL  நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.